நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். அல்லல் தரும் தொல்லைகள் யாவும் நீங்கும். குடும்ப ஒற்றுமை ஓங்கும். கணவன் மனைவி உறவு சிறக்கும். வேலை, திருமணம், குழந்தைப் பேறு, மற்றும் சகல பாக்கியங்களும் கிட்டும். முருகன் மூல மந்திரம் : ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ குமாரஸ்த்தவம் 1. ஓம் ஷண்முக பதயே நமோ நம ஹ ஓம் _ ஆறுமுகத் தலைவனுக்கு வணக்கம் 2. ஓம் ஷண்மத பதயே நமோ நம ஹ ஓம் _ ஆறு சமயங்களின் தலைவனுக்கு வணக்கம் 3. ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம ஹ ஓம் _ ஆறு திருக்கழுத்துக்களுடைய தலைவனுக்கு வணக்கம் 4. ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம ஹ ஓம் _ ஆறு கிரீடங்களை அணிந்துள்ள தலைவனுக்கு வணக்கம் 5. ஓம் ஷட்கோண பதயே நமோ நம ஹ ஓம் _ அறுகோணச் சக்கரத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனுக்கு வணக்கம் 6. ஓம் ஷட்கோஷ பதயே நமோ நம ஹ ஓம் _ ஆறு தோத்திர நூல்களின் தலைவனுக்கு வணக்கம் 7. ஓம் நவநிதி பதயே நமோ நம ஹ ஓம் _ ஒன்பது வகையான செல்வங்களின் தலைவனுக்கு வணக்கம் 8. ஓம் சுபநிதி பதயே நமோ நம ஹ ஓம் _ பேரின்பச் செல்வத்தின் (முக்தியின்பம்) தலைவனுக்கு வணக்கம் 9. ஓம் நரபதி பதயே நமோ நம ஹ ஓம் _ அரசர் தலைவனுக்கு வணக்கம் 10. ஓம் ஸுரபதி பதயே நமோ நம ஹ ஓம் _ தேவர்கள் தலைவனுக்கு வணக்கம் 11. ஓம் நடச்சிவ பதயே நமோ நம ஹ ஓம் _ நடனம் ஆடும் சிவனின் தலைவனுக்கு வணக்கம் 12. ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம ஹ ஓம் _ ஆறெழுத்துத் தலைவனுக்கு வணக்கம் 13. ஓம் கவிராஜ பதயே நமோ நம ஹ ஓம் _ கவியரசர் தலைவனுக்கு வணக்கம் 14. ஓம் தபராஜ பதயே நமோ நம ஹ ஓம் _ தவத்தினருக்கு அரசான தலைவனுக்கு வணக்கம் 15. ஓம் இகபர பதயே நமோ நம ஹ ஓம் _ இம்மை இன்பத்தையும் மறுமை இன்பத்தையும் அளிக்கும் தலைவனுக்கு வணக்கம் 16. ஓம் புகழ்முனி பதயே நமோ நம ஹ ஓம் _ திருப்புகழ் பாடிய முனிவராகிய அருணகிரிநாதரின் தலைவனுக்கு வணக்கம் 17. ஓம் ஜயஜய பதயே நமோ நம ஹ ஓம் _ மிகுந்த வெற்றியையுடைய தலைவனுக்கு வணக்கம் 18. ஓம் நயநய பதயே நமோ நம ஹ ஓம் _ மிக்க நன்மையும் இன்பமும் தரும் தலைவனுக்கு வணக்கம் 19. ஓம் மஞ்சுள பதயே நமோ நம ஹ ஓம் _ அழகுருவான தலைவனுக்கு வணக்கம் 20. ஓம் குஞ்சரீ பதயே நமோ நம ஹ ஓம் _ தேவகுஞ்சரி எனும் தெய்வயானை அம்மையின் தலைவனுக்கு வணக்கம் 21. ஓம் வல்லீ பதயே நமோ நம ஹ ஓம் _ வள்ளியம்மை தலைவனுக்கு வணக்கம் 22. ஓம் மல்ல பதயே நமோ நம ஹ ஓம் _ மற்போரில் வல்ல தலைவனுக்கு வணக்கம் 23. ஓம் அஸ்த்ர பதயே நமோ நம ஹ ஓம் _ கைவிடு படைகளின் தலைவனுக்கு வணக்கம் 24. ஓம் சஸ்த்ர பதயே நமோ நம ஹ ஓம் _ கைவிடாப் படைகளின் தலைவனுக்கு வணக்கம் 25. ஓம் ஷஷ்டி பதயே நமோ நம ஹ ஓம் _ சஷ்டி திதியில் அமைந்த கந்த விரத்தத் தலைவனுக்கு வணக்கம் 26. ஓம் இஷ்டி பதயே நமோ நம ஹ ஓம் _ வேள்வித் தலைவனுக்கு வணக்கம் 27. ஓம் அபேத பதயே நமோ நம ஹ ஓம் _ வேற்றுமையற்ற தலைவனுக்கு வணக்கம் 28. ஓம் ஸுபோத பதயே நமோ நம ஹ ஓம் _ மெய்ஞ்ஞானம் அருளும் தலைவனுக்கு வணக்கம் 29. ஓம் வியூஹ பதயே நமோ நம ஹ ஓம் _ சேனைகளின் படைவகுப்புத் தலைவனுக்கு வணக்கம் 30. ஓம் மயூர பதயே நமோ நம ஹ ஓம் _ மயூர நாதனுக்கு வணக்கம் 31. ஓம் பூத பதயே நமோ நம ஹ ஓம் _ பூத வீரர்களின் தலைவனுக்கு வணக்கம் 32. ஓம் வேத பதயே நமோ நம ஹ ஓம் _ வேதங்களின் தலைவனுக்கு வணக்கம் 33. ஓம் புராண பதயே நமோ நம ஹ ஓம் _ புராணங்களின் தலைவனுக்கு வணக்கம் 34. ஓம் ப்ராண பதயே நமோ நம ஹ ஓம் _ ஆன்மாவின் தலைவனுக்கு வணக்கம் 35. ஓம் பக்த பதயே நமோ நம ஹ ஓம் _ அடியார்களின் தலைவனுக்கு வணக்கம் 36. ஓம் முக்த பதயே நமோ நம ஹ ஓம் _ பாச பந்தங்களினின்றும் விடுபட்டவர்களுடைய தலைவனுக்கு வணக்கம் 37. ஓம் அகார பதயே நமோ நம ஹ ஓம் _ அகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம் 38. ஓம் உகார பதயே நமோ நம ஹ ஓம் _ உகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம் 39. ஓம் மகார பதயே நமோ நம ஹ ஓம் _ மகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம் 40. ஓம் விகாச பதயே நமோ நம ஹ ஓம் _ எங்கும் நிறைந்துள்ள இறைவனுக்கு வணக்கம் 41. ஓம் ஆதி பதயே நமோ நம ஹ ஓம் _ எல்லாவற்றிற்கும் முதற்காரணமாகிய தலைவனுக்கு வணக்கம் 42. ஓம் பூதி பதயே நமோ நம ஹ ஓம் _ சகல ஐசுவரியங்களின் தலைவனுக்கு வணக்கம் 43. ஓம் அமார பதயே நமோ நம ஹ ஓம் _ மாரனை எரித்த தலைவனுக்கு வணக்கம் 44. ஓம் குமார பதயே நமோ நம ஹ. ஓம் _ குமாரனாகிய பிரானுக்கு வணக்கம். ஸ்ரீ குமாரஸ்த்தவம் முற்றிற்று
--------------------------------------------------------------------------------------------------------------------------------
1.விநாயகர்துதி
விதத்தாம் ச்ரியம் காபி கல்யாணமூர்த்தி
ஐந்து முகங்கொண்ட அப்பன் சிவனாண்டி அகம்மகிழக் கொண்டாடும் கஜமுகன் கணேசன் எப்போதும் விளையாட்டுப் பிள்ளை!
பிரம்மனும் இந்திரனும் தேவாதி தேவர்களும் வரம் வேண்டித் துதிக்கின்ற வல்லாளன் கணேசன் எப்போதும் விளையாட்டுப் பிள்ளை!
அளவிட முடியாத அருள்கீர்த்தி உடையவன் செலவிட முடியாத செல்வம் அளிப்பவன் எப்போதும் விளையாட்டுப் பிள்ளை!
புகலிடம் அவனென்று புகுந்தவர் நெஞ்சினில் பொன்னொளிர் ஜோதியாய் அமர்ந்தவன் கணேசன் எப்போதும் விளையாட்டுப் பிள்ளை!
இப்போதே வணங்கினேன் இனிதான மொழியிலே முப்போதும் அருளுவான் மூலவன் கணேசன் எப்போதும் விளையாட்டுப் பிள்ளை!
நூல்
2. தடை அகலும்
நஜாநாமி சப்தம் நஜாநாமி சார்த்தம்
நஜாநாமி பத்யம் நஜாநாமி கத்யம்
சிதேகா ஷடாஸ்யாஹ்ருதித் யோததே மே
முகான்னிஸ்ஸரந்தே கிரச்சாபி சித்ரம்.
தடதடவென வார்த்தைகள் தாளகதி தவறாமல் விடுவிடுவென வருகின்ற தேன்? தகதகவென ஜோதியாய் என்முன்னே சண்முகம் சத்தியமாய் ஒளிர்வதால் தான்!
3. ஞானசித்தி
மஹாதேவபாலம் பஜே லோகபாலம்
மனோஹாரி தேஹம் மஹச்சித்த கேஹம்
மஹீதேவ தேவம் மஹாவேத பாவம்
மயூராதிரூடம் மஹா வாக்ய கூடம்
நிறைகுடமாம் ஞானிகளின் சிந்தையிலே உறைபவனே உலகமெல்லாம் புரப்பவனே
குறைகளைவாய், கொடுநிறைவாய், குன்றுதொறும் பிறைநிலவாய் திகழ்பவனே சுப்ரமண்யா!
4. பக்தி பலப்படும்
இதி வ்யஞ்ஜயன் ஸிந்து தீரே ஆஸ்தே தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம்.
அக்கரை சேர்க்கவே அலைவாய் அமர்ந்தவா,அக்கறை கொண்டவா, ஆண்டவா, சரணம்!
5. பிறவிபோம்
அலைத் திவலை கரைதொட்டு அழிவதுபோல் மனக்கவலை தியானத்தால் தூளாகும்!
கடற்கரை அமர்ந்தானின் தாள் பணிவோம் மனக்கறை பரிதிமுன் பனியாகும்!
6. துயர் கெடும்
கிரௌ மன்னிவாஸே நராயே (அ)திரூடா
ததா பர்வதே ராஜதே தே (அ)திரூடா:
இதீவப்ருவன் கந்த சைலாதி ரூட
ஸதேவோ முதே மே ஸதா ஷண்முகோ(அ)ஸ்து
துவண்டு வருவோர்க்கு தோள்கொடுத்து துயர்துடைக்க, அகண்ட சண்முகமாய் அவனிருக்கும் திருத்தலமாம், சுகந்த மலையேறி துதிக்கவரும் பக்தர்கள் கயிலாய மலையேறும் பாக்கியத்தை அடைவார்கள்!
7. வரம் உண்டு
முனீந்த் ரானுகூலே ஸுகந்தாக்ய சைலே
குஹாயாயம் வஸந்தம் ஸ்வபாஸா லஸந்தம்
ஜனார்திம் ஹரந்தம் ச்ரயாமோ குஹந்தம்
நிலையாய் அன்பர் பாவம் துடைக்க அலைவாய்க் கரையில் மலைமேல் அமர்ந்தாய்!
தவமாய் யோகியர் நோன்புகள் நோற்க.
உயர்வாய் அம்மலை தேர்ந்தே மகிழ்ந்தார்!
உளமாம் குகையில் ஒளிரும் குகனே நலமே அருள்வாய் நாளும் சரணம்!
8. பாவம் பொடிபடும்
லஸத்ஸ்வர்ணகே ஹேந்ருணாம் காமதோஹே
ஸுமஸ்தோம ஸஞ்சந்த மாணிக்ய மஞ்சே
ஸமுத்யத் ஸஹல்ரார்க்க துல்ய ப்ரகாசம்
ஸதாபாவயே காத்திகேயம் ஸுரேசம்
பத்தரை மாற்றுத் தங்கப் பள்ளி ரத்தினக் கட்டில் ரம்மிய மலர்கள்
ஒத்தின மஞ்சம் ஒளிரும் விளக்குகள் நித்தில அழகுக் கார்த்திகைப் பெண்களின்
உத்தமப் புத்திரன் ஓம்ஓம் ஓமெனும் சப்தப் ப்ரணவ வடிவேல் முருகன்!
மொத்தம் ஆயிரம் சூரியன் போல முன்னே அமர்ந்தான், முனைவோர் விருப்பம்
எத்தனை யாயினும் நிறைவேற் றிடுவான், சித்தனாம் செந்தி லம்பதி சீலன்,
அத்தனின் மைந்தன் அம்பிகை நேசன், சத்குரு நாதனை பணிந்தேன் சரணம்!
மனோஹாரி லாவண்ய பீயூஷபூர்ணே
மன:ஷட்பதோ மே பவக்லேச தப்த:
ஸதா மோததாம் ஸ்கந்த தே பாத பத்மே
செக்கச் சிவந்த திருவடிகள் செந்தா மரையோ வியக்கின்றேன்,
ஒக்க அவற்றுள் அமர்ந்திருக்கும் வண்டென் மனதென நினைக்கின்றேன்!
திக்கித் திணறிநான் கவலையிலே சீர்மிகக் குலையும் வேளையிலே
சிக்கெனப் பிடித்தேன் உன்பாதம் சிக்கல் இனியிலை செந்தூரா!
10. வழி பிறக்கும்
க்வணத் கிங்கிணீ மேகலா சோபமானாம்
லஸத்தேம பட்டேன வித்யோதமானாம்
கடிம்பாவயே ஸ்கந்த! தே தீப்யமானாம் வெண்ணீ ரணிந்து பன்னீர் பூசி முன்னே நிற்கும் மூலவன் முருகனின் பொன்னிற ஆடை போர்த்திய இடையில் மின்னும் மணிகள் ஓசை எழுப்பும்
அவ்விடை காந்தியில் அகத்தைக் குவித்து அருந்தவம் புரிதலே அவனியில் மோட்சம்!
11. ஆபத்து நீங்கும்
புலிந்தேச கன்யா கனா போக துங்க
ஸ்தனாலிங்கனாஸக்த காச்மீர ராகம் நமஸ்யாம்யஹம் தாரகாரே தவோர:
ஸ்வபக்தாவனே ஸர்வதா ஸானுராகம்
முளைத்த தாரக அசுரனை வதைத்து முனிவர் தேவர் பக்தரைக் காத்த
உழைப்பில் சிவந்த உத்தமத் தோளினன்! உருகிய நெஞ்சினன் உதிர்க்கும் கருணையில்
கிளைக்கும் துயர்கெடும், கேண்மை பலப்படும் நினைப்பே அவனாய் நித்தமும் தொழுவோம்!
12. ஞான சித்தி
விதௌக்லுருப்த தண்டான் ஸ்வலீலா-த்ருதாண்டான் நிரஸ்தேப சுண்டான் த்விஷத் கால தண்டான்
ஹதேந்த்ராரி ஷண்டான் ஜகத்ராண சௌண்டான்
ஸதாதே ப்ரசண்டான் ச்ரயே பாஹுதண்டான்
தவறுகள் செய்வது பிரம்ம னாயினும் தண்டனை உண்டென காட்டியகை!
உயரிய தேவரின் எதிரிகளை உருத்தெரி யாமல் ஆக்கியகை!
மதத்தால் தன்நிலை மறந்தகரி மறுபடி சுயம்பெற உதவியகை!
ஜகத்தைப் புரப்பதை லீலையென சகஜமாய் கருதிடும் பன்னிருகை!
இகத்திலும் பரத்திலும் எமைக்காக்கும் இன்னல்கள் துடைக்கும் கந்தனின்கை!
சுகத்திலும் துயரிலும் உடனிருக்கும் ஜோதி சொரூபனின் தூக்கியகை!
13. தாபங்கள் தீரும்
ஸமுத்யந்த ஏவஸ்திதாச் சேத் ஸமந்தாத்
ஸதா பூர்ணபிம்பா: கலங்கைச் சஹீனா:
ததாத்வன்முகானாம்ப்ருவே ஸ்கந்த ஸாம்யம்
விளங்கித் துலங்கி ஜொலித் தாலும் வேலனே உந்தன் அறுமுக மாகுமோ?
குழந்தை முகத்தின் குமரக் கடவுளே குவித்தேன் கரங்கள் கொடுப்பாய் சாந்தி!
மழலைக் கவிதையை மகிழ்வாய் ஏற்று வரமாய் அமைதியை தருவாய் போற்றி!
14.லாபமுண்டாகும்
கடாக்ஷவலீப்ருங்க ஸங்கோஜ் வலானி
ஸுதாஸ்யந்தி பிம்பா தராணீச ஸுனோ
தவாலோகயே ஷண்முகாம் போருஹாணி
விண்ணவர்கோன் பரமேசன் விழிதிறக்க உதித்தவனே! சண்முகனே! செம்மலர்த்தேன் தின்னவரும் வண்டுகளாய்
மின்னிவரும் உன் பார்வை; புன்னகையோ அன்னங்கள் !
தென்னவனின் கமலமுகம் சிந்தையிலே தினம் மலரும்!
15. கடைக்கண் பார்வை கிட்டும்
விசாலேஷுகர்ணாந்த தீர்க்கேஷ்வஜஸ்ரம் தயாஸ்யந்தி ஷூத்வாதசஸ்வீக்ஷணேஷு
மயீஷத் கடாக்ஷ: ஸக்ருத் பாதிதச்சேத்
பவேத் தே தயா சீல காநாம ஹானி :
காதுவரை நீண்டகண்கள் பன்னிரண்டு
கருணைமழை பொழிவதாகும் உனதுபார்வை போதுமந்த கடைவிழியின் கீற்றுமின்னல்
மீதமுள்ள பிறவியாவும் ஓய்ந்துபோகும்!
16. மனோரதம் நிறைவேறும்
ஸுதாங்கோத்பவோ மே(அ)ஸிஜீவேதி ஷட்தா ஜபன் மந்த்ரமீசோ முதா ஜிக்ரதே யான் ஜகத்பாரப்ருத்ப்யோ ஜகன்னாத தேப்ய:
உயிர்களைக் காக்கும் சிரசுகள் ஆறும் உயர்ந்த ரத்தினக் கிரீடம் தரிக்கும்!
மந்திரம் அறுமுறை மகிழ்வுடன் ஜெபித்து மகேசன் உச்சி முகர்ந்த சிரங்களை
மனதில் அழுத்தி வணங்கினேன் சரணம், மறைகளைக் காக்கும் குகனே வருக!
அனலில் புழுவாய் துடிக்கும் உயிர்களை அடைக்கலம் ஏற்கும் முருகா வருக!
17. வீரம பிறக்கும்
சலத் குண்டல ஸ்ரீலஸத் கண்டபாக:
கடௌ பீதவாஸா: கரே சாருசக்தி:
புரஸ்தான் மமாஸ்தாம் புராரேஸ்தனூஜ:
இளமையை பறைசாற்றும் கன்னக் கதுப்புகள் இடைதனில் சுற்றிய மரகதப் பட்டுடை!
இமைப்பில் திரிபுரம் எரித்தவன் கனிந்து இமைக்கச் சுடராய் உதித்தவா, சக்தி
உமைவேல் கொண்டு நின்றவா வேலவா எமைநீ காக்கவா, இக்கணம் எழுந்துவா!
18. அன்பு நிலைக்கும்
(ஆ)ஹ்வயத்யா தராச் சங்கரே மாதுரங்காத்
ஸமுத்பத்ய தாதம் ச்ரயந்தம் குமாரம்
ஹராச்லிஷ்ட காத்ரம் பஜே பாலமூர்த்திம்
அம்மை மடியிருப்பாய் அழகா குமராவென
அத்தன் அழைத்திடவே அவசரமாய் எழுந்தேநீ
அப்பன் கையணைப்பில் அகமகிழப் போயிருப்பாய்,
இம்மை, எழுமைக்கும் இறைவன்நீ வணங்குகிறேன்!
19.வினை தீரும்
குமாரேச ஸூனோ! குஹ! ஸ்கந்த! ஸேனா
பதே! சக்திபாணே! மயூராதி ரூட!
புஸிந்தாத்மஜா காந்த! பக்தார்திஹாரின்!
ப்ரபோ! தாரகாரே! ஸதா ரக்ஷமாம் த்வம்
குமரனே மகேசனின் மைந்தனே குகனே கந்தனே தளபதியே
வேலனே சத்தியுமை பாலனே வேரோடு வினைகளை அழிப்போனே!
மயிலேறும் கடவுளே மால்மருகா ஒயிலான வள்ளியின் காதலனே
அசுரர்களின் காலனாய் அவதரித்தோய் அடியாரைக் காத்திடுவாய் வணங்குகிறோம்!
20. தரிசனம் கிட்டும்
கபோத்காரி வக்த்ரே பயோத்கம்பி காத்ரே
ப்ரயாணோன்முகே மய்யநாதே ததானீம்
த்ருதம் மே தயாலோ பவா (அ)க்ரே குஹத்வம்
கருணா மூர்த்தியே கந்தவேளே கடைசி நொடியில் நினைவிழந்து
கபம்வாய் நுரைக்க உணர்விழந்து கைகால் அசைவுகள் ஏதுமின்றி
மெய்வாய் நடுங்க விதிர்விதிர்த்து பொய்யாம் உறவுகள் விலகி நிற்கும்
பொழுதினில் வருவாய் சண்முகனே தருவாய் தரிசனம் புண்ணியனே!
21. எமபயம் தீரும்
தஹச்சிந்தி பிந்தீதி மாம் தர்ஜயத்ஸு
மயூரம் ஸமாருஷ்ய மா பைரிதித்வம்
புரச்சக்தி பாணிர் மமாயாஹி சீக்ரம்
கட்டு உருட்டென காலதூதாள் எட்டி மிரட்டியென் கண்முன்னே
சுட்டுக் கொளுத்திட நிற்கையிலே சுடராய் வருவாய் மயில் மீது!
இடரைக் களையும் வேல்கொண்டு இனிமேல் பயமிலை எனச்சொல்லி
இன்னுயிர் காப்பாய் சரவணனே! என்னுயிர் அடைக்கலம் பவகுகனே!
22. முக்தி கிட்டும்
ப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்த்தயே (அ)னேக வாரம்
நவக்தும் க்ஷமோ (அ)ஹம் ததாநீம்
க்ருபாப்தே நகார்யாந்த காலே மனாகப்யுபேக்ஷா
23. கிலேசம் அகலும்
ஹதஸ்தாரகஸ் ஸிம்ஹவக்த்ரச்ச தைத்ய:
மமாந்தர் ஹ்ருதி ஸ்தம் மன: க்லேச மேகம்
நஹம்ஸி ப்ரபோ கிம் கரோமி க்வயாமி?!
தாரகா அசுரனும் தம்பிகளும் படைகளும் தானழிந்து அவர்கள்தம் பாவங்களும் பொசுங்கின!
ஆனாலும் என் மனதை ஆட்டுவிக்கும் கவலைகளை ஏனோ துடைக்காமல் இருக்கின்றாய் செந்தூரா!
தூணாம் உன்பாதம் பற்றினேன் வினையறுப்பாய், வீணாய் வேறெங்கும் விடைதேடி அலையமாட்டேன்!
24. மனநோய் தீரும்
அஹம் ஸர்வதா துக்க பாரா வஸந்நோ
பவான் தீனபந்துஸ்த்வ தன்யம் நயாசே!
பவத்பக்தி ரோதம் ஸதாக்லுருப்த பாதம்
மமாதிம் த்ருதம் நாச'யோமா ஸுதத்வம்
எமை வாட்டும் மனக்கவலை துக்கங்கள், சோகங்கள்
இவைகளை நீ அழித்துவிடு எந்தனுக்கு வாழ்வுகொடு!
உமைமைந்தா காத்திகேயா உரிமையுடன் கேட்கின்றேன்
உனைப்போல ஏழையர்க்கு உதவுகின்ற பேருண்டா?
25. ஏவல் முறியும்
ஜ்வரோன் மாத குல்மாதி ரோகாமஹாந்த:
பிசாசாச்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்
விலோக்ய க்ஷணாத் தாரகாரேத்ரவந்தே
இலவுதியைப் பார்த்தவுடன் எங்கோ பறந்து போகும்! உடம்பினிலே அதைப்பூசி உள்ளுக்குள் அருந்திவிட
தடந்தோளா உன்னெதிரே தாரகாசுரன் வீழ்ந்தாற்போல் இடந்தெறியா தழிந்துவிடும் இன்னல்களும் வியாதிகளும்!
திடம்படும் உடம்புமனம் சிந்தனையும் தெளிவாகும்! கடன் நீங்கிப் பிறவி நோய்க் கலிதீரும் உளமாறும்!
26. சத்திய தரிசனம்
முகே மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம்
கரே தஸ்ய க்ருத்யம் வபுஸ்தஸ்ய ப்ருத்யம்
குஹே ஸந்து லீனா மமாசேஷ பாவா:
கந்தனின் லீலைகளை பேசட்டும் வாக்கு! கந்தனின் சேவைக்கே இருக்கட்டும் கைகள்!
கந்தனுக் காகவே சிந்தனையும் செயல்களும் கந்தனுக் கென்றே யென் எண்சாண் உடம்பும்!
கந்தனின் சந்நிதியில் சகலமும் சமர்ப்ப ணம்! கந்தனின் திருவடியே சாஸ்வதம், சரணம்!
27. வரம் பெறலாம்
முனீனா முதாஹோ ந்ருணாம் பக்திபாஜாம்
அபீஷ்டப்ரதா: ஸந்தி ஸர்வத்ர தேவா:
ந்ருணா மந்த்ய ஜானா மபி ஸ்வார்த்த தானே
குஹாத் தேவமன்யம் நஜானே நஜானே
வீணே வாழ்நாளை கழிக்கின்ற மனிதருக்கும் விரக்தியிலே தருமத்தை மறந்துவிட்ட ஏழையர்க்கும்
தானாய் முன்வந்து காக்கின்ற அருட்கடவுள் சேனா பதியே திருச் செந்தூர் ஜெயந்திபுரக்
கோனே உனைத்தவிர யாருண்டு? சரணடைந்தேன்! வானே, வளர்மதியே, வள்ளலே! வாழ்விப்பாய்!
28.குடும்ப மேன்மை
நரோ வா(அ)த நாரீக்ருஹே யே மதீயா:
பஜந்தோ நமந்த: ஸ்துவந்தோ பவந்தம்
ஸ்மரந்தச்ச தே ஸந்து ஸர்வே குமார
மனைவியும் மக்களும் சுற்றமும் பசுக்களும் மனையில் உள்ள அனைவரும் உன்னை
மனதால் வரித்து வணங்கி மகிழ்வர் புனையும் பாடலும் பூஜையும் நின்னையே
புகழும் வழுத்தும் நினைவினில் நிறுத்தும்! அனைத்தும் நீயே ஆனாய் குமரா!
அலைவாய் அமர்ந்த சண்முகத் தரசே அருள்வாய் சேவற்கொடியுடை குகனே!
29. விஷம் இறங்கும்
ம்ருகா: பக்ஷிணோ தம்சகா யே சதுஷ்டா
ததா வ்யாத யோ பாதகாயே மதங்கே
பவச் சக்தி தீக்ஷணாக்ர பின்னாஸ் ஸுதூரே
வினச்'யந்து தே சூர்ணிதக்ரௌஞ்ச சை'ல
கூர்வேலால் கிரௌஞ்ச மலையை பிளந்தவா குறிவைத்து என்னைத் தாக்க வரும்
பக்ஷிகள் பூச்சிகள்மிருகங்கள் புரியாத வியாதிகள் யாவையும் எதிர்கொண்டு தூள்தூளாக்குவாய்.
தோகை மயில்மீது சக்திவேல் கையேந்தி தோழனாய் விரைந்துவா துயரெலாம் போக்கவா!
வாகை சூடிவா வள்ளியொடு தேவயானி காதலனாய் கண்முன்னே இக்கணமே தோன்றுவாய்!
30.பழிவிலகும்
ஜனித்ரீ பிதா சஸ்வபுத்ராபராதம்
ஸஹேதே நகிம் தேவஸேனாதி நாத
அஹம் சாதிபாலோ பவான் லோக
தாத: க்ஷமஸ்வாபராதம் ஸமஸ்தம் மஹேஈ
பெற்றவன் நீயன்றோ , குழவியான் குற்றம் செய்யினும் பொறுத்தருள்!
பெற்றற் கரிய பேறே! தேவர்களின் உற்ற சேனாபதித் தலைவா!
தெற்றை மன்னித்தே எனக்காப்பாய்! எந்நாட்டவர்க்கும் இளவரசே!
நம:கேகினே சக்தயே சாபிதுப்யம்
நம: ச்சாக துப்யம் நம: குக்குடாய
நம: ஸிந்தவே ஸிந்து தேசாய துப்யம்
புன: ஸ்கந்த மூர்த்தே நமஸ்தே நமோ (அ)ஸ்து
தத்வ ஸ்வரூப செம்மறி போற்றி! தலைவனின் கொடியமர் சேவல் போற்றி!
அண்ணலின் கால்தொடும் கடலே போற்றி! அலைவாய் செந்தூர் அமர்ந்தாய் போற்றி!
கந்தா கடம்பா கதிர்வேல் போற்றி ! எந்தன் வணக்கம் ஏற்பாய் போற்றி!
32. வெற்றி உறுதி
ஜயா மோக கீர்த்தே ஜயானந்த மூர்த்தே
ஜயானந்த ஸிந்தோ ஜயாசேஷ பந்தோ
ஜயத்வம் ஸதாமுக்தி தானேச' ஸுனோ
ஆனந்த மூர்த்தியே போற்றி ! அருள்வெள்ள ஜோதியே போற்றி !
வான்தொடும் கீர்த்தியே போற்றி ! வளர்கின்ற அனுபூதி போற்றி !
பேணுவாய் உயிர்களை போற்றி ! பிறப்பின்றி தேற்றுவாய் போற்றி !
தீனர்களின் நாயகா போற்றி ! சிவபாலா முருகா போற்றி! !
23. மங்களம் (நூற்பயன்)
படேத் பக்தியுக்தோ குஹம் ஸம்ப்ரணம்ய
ஸுபுத்ரான் களத்ரம் தனம் தீர்க்க மாயு:
லபேத் ஸ்கந்த ஸாயுஜ்ய மந்தே நரஸ் ஸ:
அப்பன் கந்தனை நினைத்து வணங்கி தப்பா தனுதினம் புஜங்கம் படிக்க
இனியாள் மனைவி இயைந்த மக்கள் நனிமிகு செல்வம் | நயந்த வாழ்க்கை
நெடிய ஆயுள் நிகரில் மகிழ்ச்சி அனைத்தும் எய்துவர் அவனருளாலே!
சரவண பவனை சண்முகக் கடவுளை சிரமேற் கொண்டு சிந்தையில் இருத்த
வரமாய்க் கந்தனின் பதமலர் அடையலாம் வாழ்க வள்ளி குஞ்சரி மணாளன்!
-------------------------------------------------------------------------------------------------------------------------------- ஸ்ரீ சுப்பிரமணியர் புஜங்கம் தமிழாக்கம் - கவியரசு
முன்னுரை
எந்நாளு மிளையோன் வினைக்குன் றழிப்பான் இபமா முகன்பஞ்ச வதனன் மதிப்பான் பொன்னாகர் சுரர்நாடு புனிதன் கணேசன் பொன்றாத திருவாள னருள்பேணு வோமே. ...... 1
சொல்லேது பொருளேது கவியேது வசனந்
துகளேதும் இல்லாத தேதென்ப தறியேன்
எல்லேறு மறுமா முகச்சோதி யிதயத்
திருந்தே நறுந்தே னெனும்பாடல் தருமே. ...... 2
மயிலூர்தி சதுர்வேத மறைகின்ற பொருளோன்
மனந்தன் வசங்கொள் மகானுள்ள முறைவோன்
பயிலும் மகாவாக் கிலக்கன் சிவன்சேய்
பனவர்க்கு மெய்த்தேவை நினைவின்கண் வைத்தேன். ...... 3
என் முன்னர் வந்தோர் பிறப்பென்ற வேலை
யினை யேறி னாரென்று நிலமேல் விளக்கி
துன்னுங் கடற்செந்தி லுறைகின்ற தூயோன்
துங்கப் பராசக்தி யருள்சேயை நினைவாம். ...... 4
இதிலேறி னோர்கைலை யதிலேறி னோரே
என்பா னெனக்கந்த வரை மீது நின்றோன்
மதிபோலு மறுமா முகச்செந்தி னாதன்
மலர்போலு மடிவாழ்க யாம்வாழு மாறே. ...... 6
பிரசித்தி சேர்சித்தர் வாழ்கந்த வெற்பில்
ஒருசோதி வடிவோடு குகைமேவு செந்தூர்
உயிருக்கொ ருயிர்செம்பொ னடிபற்று வோமே. ...... 7
அஞ்சம் பொலிந்தே சிவந்தேர் நிறைந்தே
அமுதம் பொழிந்தே பிறப்பென்ற கோடை
வஞ்சந் தவிர்ந்தே விளங்குன் பதத்தா
மரைமேவு மளிநெஞ்ச மலைவாயின் முருகே. ...... 9
இலகும் பொன் உடை மீது கணகண்கனென்றே இசை கிண்கிணீ கச்சையொடு பட்டையம் பொன்
குறமாதி னிருதுங்க தனகுங்கு மந்தான்
கொடுசேந்த தோஅன்பர் குலமீது கொண்ட
திறமான அநுராகம் வெளிநின்ற தோநின்
திருமார்பில் ஒளிசெந்தி லாயஃது தொழுவேன். ...... 11
அயனைப் புடைத்தண்ட நிரையைப் புரந்தே ஆனைக்கை வென்றந்த கனையும் துரந்தே துயரிந்த்ரன் பகைவென் றபயமென்ற நின்கை துணை செய்க வுயர் செந்தி லிறைவா எமக்கே. ...... 12
பனியென்று முளவாயோர் பங்கம் படாமல்
பரிபூர்ண வொளியோடு பலதிக்கு நிலவை
நனிவீசு மதிமூ விரண்டென்று முளவேல்
நளிர் செந்தி லோனாறு முகமொக்கு மாலோ. ...... 13
சிவன் மைந்த நகையென்ற அனமென்று மேவித்
திகழுங் கடைக்கண்களெனும் வண்டுலாவித்
தவவின்சொ லமுதூறு கொவ்வைச்செ விதழ்சேர்
சலசங்க ளெனுமாறு முகமென்று காண்பேன். ...... 14
குறைவென்கொ லோசெந்தி லாய்கா தளாவிக்
குறையாத அருள்வீசு விழிபன் னிரண்டில்
இறையேயொர் விழியின் கடைப்பார்வை தொழுமிவ்
வெளிநாயி னேன்மீதி லொருபோது விழுமேல். ...... 15
எனதங்க நீமைந்த வாழ்கென்று மோந்தே
ஈசன் களிக்கின்ற தேசொன்று முடிசேர்
நினதிங்கள் முகமாறு மறவாது பணிவேன்
நிலைநின்ற செந்தூரில் வெளிநின்ற தேவே. ...... 16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக