சிவஸ்தோத்திரம்

சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் – மந்திரம், பாடல் வரிகள் மற்றும் பொருள் 

‘திருவைந்தெழுத்து’ என கொண்டாடப்படும் நமஷிவாய மந்திரத்தின் வலிமையையும், சிவனையும் போற்றுவதாக அமைந்திருக்கிறது சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம். திருவைந்தெழுத்து என போற்றி கொண்டாடப்படும் சிவ பஞ்சாட்சர தோத்திரம் சிவனைப் புகழ்ந்து பாடுவதுடன் ந-ம-ஷி-வா-ய என்னும் ஐந்தெழுத்துகளின் அசையில் புதைந்துள்ள சக்தியையும் விளக்குகிறது. இந்த மந்திரத்தை சௌண்ட்ஸ் ஆப் ஈஷா இசைக் குழுவினர் நமக்கு வழங்குகிறார்கள். 

‘திருவைந்தெழுத்து’ என கொண்டாடப்படும் நமஷிவாய மந்திரத்தின் வலிமையையும், சிவனையும் போற்றுவதாக அமைந்திருக்கிறது சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்.
திருவைந்தெழுத்து என போற்றி கொண்டாடப்படும் சிவ பஞ்சாட்சர தோத்திரம் சிவனைப் புகழ்ந்து பாடுவதுடன் ந-ம-ஷி-வா-ய என்னும் ஐந்தெழுத்துகளின் அசையில் புதைந்துள்ள சக்தியையும் விளக்குகிறது. 

 

 

பாடல் வரிகள்


தமிழ்

ஆஉம் நம ஷிவாய ஷிவாய நம ஆஉம்
ஆஉம் நம ஷிவாய ஷிவாய நம ஆஉம்


நாகேந்த்ர ஹாராய த்ரிலோச்சனாய
பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய
நித்யாய சுத்தாய திகம்பராய
தஸ்மை ந காராய நம ஷிவாய


மந்தாகினி ஸலில சந்தன சர்ச்சிதாய
நந்தீஸ்வர ப்ரமத நாத மகேஸ்வராய
மந்தார புஷ்ப பஹுபுஷ்ப ஸுபூஜிதாய
தஸ்மை ம காராய நம ஷிவாய


சிவாய கௌரீ வதனாப்ஜ ப்ருந்த
ஸூர்யாய தக்ஷாத்வர நாஷகாய
ஸ்ரீநீலகந்த்தாய வ்ருஷத்வஜாய
தஸ்மை ஷி காராய நம ஷிவாய


வசிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய
முனீந்த்ர தேவார்ச்சித ஷேகராய
சந்த்ரார்க்க வைஷ்வநர லோச்சனாய
தஸ்மை வ காராய நம ஷிவாய


யக்ஷ ஸ்வரூபாய ஜடாதராய
பிநாக ஹஸ்தாய சனாதனாய
திவ்யாய தேவாய திகம்பராய
தஸ்மை ய காராய நமஷிவாய


பஞ்சாஷரமிதம் புண்யம் ய படேச் சிவ
சன்னிதௌ சிவலோக மவாப்னோதி சிவனே ஸஹமோமதே

 

பொருள் :
ந – அகரம்
நாகங்களின் அரசனை தனது ஆபரணமாகச் சூடிய முக்கண் முதல்வனே,
திருநீறு பூசிய மேனியனே மகாதேவனே,
என்றும் நிலைத்திருக்கும் நித்தியமானவனே, திசைகள் நான்கையும் ஆடையாக அணிந்திருக்கும் எப்போதும் தூய்மையனே,
‘ந’-கர அசையால் குறிப்பிடப்படும் சிவனே உனை வணங்குகிறோம்


ம – அகரம்
மந்தாகினி நதிநீர் கொண்டு வணங்கப்பட்டு, அரைத்த சந்தனம் பூசப்படுபவனே,
நந்தியால் வணங்கப்படும் தேவனே, பூதகணங்களாலும் வணங்கப்படும் தலைவனே மகேஸ்வரனே,
மந்தாரை மலரையும் இன்னும் பல மலர்களையும் கொண்டு வணங்கப்படுபவனே
‘ம’-கர அசையால் குறிப்பிடப்படும் சிவனே உனை வணங்குகிறோம்

‘ஷி’ – இகரம்
தாமரை முகத்தாள் கௌரியின் முகம் மலர காரணமான அதிகாலை சூரியனைப் போன்றவனே, மங்களகரமானவனே,
தட்சணின் யாக அர்ப்பணத்தை அழித்தவனே,
நீல நிறத்தில் கழுத்தும், காளை வாகனமும் கொண்டவனே,
‘ஷி’ கர அசையால் குறிப்பிடப்படும் சிவனே உனை வணங்குகிறோம்


‘வா’ – ஆகாரம்
வஷிஷ்ட்டன், அகத்தியன், கௌதமன் போன்ற சிறந்த, பெரும் முனிவர்களாலும்,
வானுறை தேவர்களாலும் வணங்கப்படுபவனே, பிரபஞ்சத்திற்கே மகுடமாக இருப்பவனே,
சந்திரன், சூரியன். அக்னியைத் தனது மூன்று கண்களாகக் கொணடவனே,
‘வா’கார அசையால் குறிப்பிடப்படும் சிவனே உனை வணங்குகிறோம்


ய – அகரம்
தியாகத்தின் திருவுருவானவனே, சடை முடி தரித்தவனே
ஆதியும் அந்தமும் இலாதவனே, திரிசூலம் ஏந்தியவனே,
தெய்வீகமானவனே, ஒளி பொருந்திய மேனியனே, நாற்திசைகளையும் ஆடையாக அணிந்தவனே,


‘ய’கர அசையால் குறிப்பிடப்படும் சிவனே உனை வணங்குகிறோம்
யாரொருவர் இந்த பஞ்சாட்சர மந்திரத்தை சிவனுக்கு அருகில் உச்சரிக்கிறாரோ,
அவர் சிவபாதம் சேர்ந்து பேரின்பத்தில் திளைப்பார்.
 
Thanks To : 
https://isha.sadhguru.org/mahashivratri/ta/shiva/shiva-panchakshara-stotram-in-tamil/





சிவ கவசம் – வேண்டுவன கிடைக்க, ஆரோக்கியம் அடைய

சிவ கவசம் | Shiva Kavacham

அமுதமொழியாள் உமையவள் கணவ!
அரிதரி தரிதனும் மனித்தப் பிறவி

அவனியில் எடுத்துழல் அடியேன் என்னை
அஞ்சலென்றருளிக் காத்திட வருக!
அக்கு வடந்தனை அணிந்தோய் வருக!
அங்கி அங்கை ஏற்றோய் வருக!
அச்சுறு புரந்தனை எரித்தோய் வருக!
அஞ்சலி புரிவோர்க்கு அருள்வோய் வருக!

அட்டமா குணங்கள் செறிந்தோய் வருக!
அண்ணா மலைதனில் உறையோய் வருக!
அத்தி உரிதனை உடுத்தோய் வருக!
அந்தி வண்ணம் கொண்டோய் வருக!
அப்பும் ஆரும் மிலைந்தோய் வருக!
அம்மை அப்பனாம் வடிவோய் வருக!
அய்ந்தினை நிலமெலாம் உரியோய் வருக!
அர்ச்சனை ஆற்றுவார்க் கருள்வோய் வருக!

அல்லற் பிறவி அறுப்போய் வருக!
அவ்வியத் தக்கனை ஒறுத்தோய் வருக!
அள்ளிப் பருகும் அமுதோய் வருக!
அற்பொழுதெரி கொண்டாடுவோய் வருக!
மத்தம் மதியம் கூவிளம் அறுகு
தும்பை எருக்கு எழில்நீர் கங்கை
பொன்னெனப் பூத்துக் குலுங்கும் கொன்றை
யாவும் மிலைந்த முடியோய் வருக!

அன்னமென் நடையாள் வேட்டோய் வருக!
கண்டு தண்டாக் கவின் மிகு பொலிவு
மிளிரும் ஒளிமிகு முகத்தோய் வருக!
செங்கதிர் பரப்பும் ஞாயிறு வலப்பால்
தன்கதிர் பரப்பும் மதியம் இடப்பால்
தழலென ஞானம் பொழிவிழி நுதலில்
கொண்டு பொலியும் கண்ணா வருக!
விழுந்து பரந்த சடையோய் வருக!

நீறு பொலியும் நுதலோய் வருக!
குழைவளர் இசைநுகர் செவியோய் வருக!
கடல் நஞ்சேற்ற கழுத்தோய் வருக!
கல்லினும் வலிய தோளோய் வருக!
கொன்றை தவழும் மார்போய் வருக!
செறுநர் ஒறுக்கும் கரத்தோய் வருக!
அரவம் அசைத்த இடையோய் வருக!
உறுநர்த் தாங்கும் அடியோய் வருக!

குவளைக் கண்ணி கூறோய் வருக!
அடல்விடை மீதினிது அமர்ந்தோய் வருக!
அடியேன் என்னைக் காத்தற் பொருட்டுச்
சூலம் சுழற்றி இன்னே வருக!
உயர்தனிச் சூலமென் உச்சி காக்க!
பிழையாச் சூலமென் பின்தலை காக்க!
முனைமலி சூலமென் முந்தலை காக்க!
கூர்மலி சூலமென் குழல் காக்க!

நுண்ணிய சூலமென் நுதலினைக் காக்க!
புகழ்மலி சூலமென் புருவம் காக்க!
இலைமலி சூலமென் இடவிழி காக்க!
வலமலி சூலமென் வலவிழி காக்க!
இனையில் சூலமென் இமைகள் காக்க!
இகல்மலி சூலமென் இடச்செவி காக்க!
வலிமலி சூலமென் வலச்செவி காக்க!
கதிர்மலி சூலமென் கன்னம் காக்க!

நலிமலி சூலமென் நாசி காக்க!
வாட்டும் சூலமென் வாயினைக் காக்க!
நீண்ட சூலமென் நாவைக் காக்க!
பரமன் சூலமென் பற்களைக் காக்க!
ஊறுசெய் சூலமென் உதடுகள் காக்க!
மின்னுஞ் சூலமென் மிடறு காக்க!
பீடுடைச் சூலமென் பிடரி காக்க!
தோலாச் சூலமென் தோளினைக் காக்க!

மாறில் சூலமென் மார்பினைக் காக்க!
வச்சிரச் சூலமென் வயிற்றினைக் காக்க!
முக்கணன் சூலமென் முதுகினைக் காக்க!
வீறுடைச் சூலமென் விலாவினைக் காக்க!
அழுந்துஞ் சூலமென் அரைதனைக் காக்க!
பிளந்திடுஞ் சூலமென் பிருட்டம் காக்க!
கருத்திடுஞ் சூலமென் கழிகுறி காக்க!
கடுக்கும் சூலமென் கொப்பூழ் காக்க!

முத்தலைச் சூலமென் முழங்கை காக்க!
முனைமலி சூலமென் முன்கரம் காக்க!
அழித்திடுஞ் சூலமென் அங்கை காக்க!
புண்விளை சூலமென் புறங்கை காக்க!
பெம்மான் சூலமென் பெருவிரல் காக்க!
கூத்தன் சூலமென் குறிவிரல் காக்க!
நடுக்குஞ் சூலமென் நடுவிரல் காக்க!
அம்பலன் சூலமென் அணிவிரல் காக்க!

சிவன் திருச் சூலமென் சிறுவிரல் காக்க!
தொளைக்குஞ் சூலமென் தொடைதனைக் காக்க!
முந்துறுஞ் சூலமென் முழந்தாள் காக்க!
கனன்றெழுஞ் சூலமென் கணுக்கால் காக்க!
குலைக்குஞ் சூலமென் குதிகால் காக்க!
பாய்ந்திடுஞ் சூலமென் பாதம் காக்க!
நச்சுச் சூலமென் நரம்பெலாம் காக்க!
குத்திடும்ஞ் சூலமென் குருதி காக்க!

இடர்தரு சூலமென் இரைப்பை காக்க!
வதைக்குஞ் சூலமென் வளிப்பை காக்க!
குதறுஞ் சூலமென் குடரினைக் காக்க!
எத்துஞ் சூலமென் என்பெலாம் காக்க!
மூளெரிச் சூலமென் மூட்டெலாம் காக்க!
நாதன் சூலமென் நாடி காக்க!

மூவிலைச் சூலமென் மூளை காக்க!
மாய்க்குஞ் சூலமென் மேனி காக்க!

வருந்துஞ் சூலமென் வாதம் காக்க!
பிழையாச் சூலமென் பித்தம் காக்க!
சினந்திடுஞ் சூலமென் சிலேத்துமம் காக்க!
உலவாச் சூலமென் உயிரைக் காக்க!
உடலுரு பிணியும் உள்ளம் பிணியும்
உன்னற்கரியா நீயெனைக் காக்க!
வான்மின் பொழுதும் வானிடி பொழுதும்
வான்மதிச் சடையா நீயெனைக் காக்க!

பெய்மழைப் பொழுதும் பொய்மழைப் பொழுதும்
பெரும்புனற் சடையா நீயெனைக் காக்க!
இளவெயிற் பொழுதும் கடுவெயிற் பொழுதும்
இளமான் கரத்த நீயெனைக் காக்க!
முன்பனிப் பொழுதும் பின்பனிப் பொழுதும்
முறுவல் முகத்தா நீயெனைக் காக்க!
நிலவழி ஏகினும் நீர்வழி ஏகினும்
நிகரில் பண்பா நீயெனைக் காக்க!

வனவழு ஏகினும் வான்வழி ஏகினும்
வரிப்புலியதளா நீயெனைக் காக்க!
மலைப்புறு மலைவழி ஏகுங் காலை
மலையாள் கணவா நீயெனைக் காக்க!
சென்றிடும் பொழுதும் நின்றிடும் பொழுதும்
செவ்வனல் வண்ணா நீயெனைக் காக்க!
ஆடும் பொழுதும் ஓடும் பொழுதும்
ஆடல் மன்னா நீயெனைக் காக்க!

அறிதுயிற் பொழுதும் நெடுந்துயிற் பொழுதும்
அறிதற்கரியா நீயெனைக் காக்க!
விழித்திடும் பொழுதும் எழுந்திடும் பொழுதும்
விரிமலர்ப் பாதா நீயெனைக் காக்க!
வடபால் ஏகினும் தென்பால் ஏகினும்
வயித்திய நாதா நீயெனைக் காக்க!
மேற்பால் ஏகினும் கீழ்ப்பால் ஏகினும்
மேதகு நீற்றா நீயெனைக் காக்க!

கோணத் திக்கெலாம் ஏகுங் காலை
கொடுமழுப் படையா நீயெனைக் காக்க!
மேலே எழும்பினும் கீழே ஆழினும்
மெய்யுரை நாவா நீயெனைக் காக்க!
புனல்மிகு பாயினும் அனல்மிகு பற்றினும்
புரம் எரி விழியா நீயெனைக் காக்க!
விண்துலங்கிடினும் மண்துலங்கிடினும்
விரிபட அரவா நீயெனைக் காக்க!

கேடு விளைவிக்கும் புயல்நனி வீசில்
கேடிலியப்பா நீயெனைக் காக்க!
காலைப் பொழுதும் மாலை பொழுதும்
கால காலா நீயெனைக் காக்க!
வைகறைப் பொழுதும் மையிருட் பொழுதும்
வைந்நுதிப் படையா நீயெனைக் காக்க!
ஏற்படு பொழுதும் உச்சிப் பொழுதும்
எண் வடிவீசா நீயெனைக் காக்க!

நாண்மீன் பிறழினும் கோண்மீன் பிறழினும்
நாரி யண்ணா நீயெனைக் காக்க!
உண்ணும் பொழுதும் பருகும் பொழுதும்
உலக நாதா நீயெனைக் காக்க!
கனமழை பொழியக் களிமண் செறிந்த
வழுக்கு நிலத்தில் உழலும் பொழுது
வழுவா வண்ணம் கோல் பெற்றாற்போல்
வயிறு காய் பசிக் காற்றாராகி
யாண்டு நாடினும் உணவில்லை யாகப்
பொல்லா விதிக்கும் போகா வுயிர்க்கும்
நொந்து நொந்து நலியும் பொழுது
கொளக் கொளக் குறையா அளஅள அஃகா
அமுது தரவல கலன் பெற்றாற்போல்
நளியிரு முந்நீர் நாவாய் செல்ல
வளிமிகு வீச நாவாய் கவிழ
உய்வழியின்றி நையும் பொழுதில்
உய்வழி காட்டி உளமுவப் பூட்டும் உறுவலி
மாபெரும் புணை பெற்றாற்போல்
அதிர் கடல் தன்னில் அருங்கலந் தானும்
செல்வழிச் செவ்வனே செல்லுழிச் செல்வழி
அந்தோ வழுவ அந்தி நேர
மாதிரம் எங்கும் காரிருள் சூழக்
கரையெங்குளதென அறியா நிலையில்
கரையிங் குளதென நலங்கரை துணையெனப்
பேரொளி பாய்ச்சும் கலங்கரை விளக்கம்
கண்ணுற்றாற்போல் எண்ணரு பிறவியில்
பலப்பல தாயரும் தந்தையாரும்
பெற்றுப் பெற்றுப் பேதை யானும்
உழைக்க லாகாத் துயருள் உழல
ஊன்று கோலென உறுபெரும் புணையெனக்
கலங்கரை விளக்கெனப் பெரும்பிணி மருந்தென
நின் திருப்பாதம் காணப் பெற்றேன்!

நின்னருளாலே நின்தாள் பற்றினேன்!
நீயலால் இங்கு மெய்த் தாதை யுண்டோ!
உமையெலால் இங்கு மெய் அன்னை யுண்டோ!
திருவடி யல்லால் துணையும் உண்டோ!
திருநீறல்லால் காப்பும் உண்டோ!
திருமந்திரமலால் படையும் உண்டோ!
திருவருள் அல்லால் நிழலும் உண்டோ!
இந்நாள் காறும் பாவியான் இழைத்த
மாபெரும் பிழையும் சாலப் பொருத்துத்
தோள்திகழ் நீற்றனாய் என்முன் தோன்றிச்
சுந்தர நீற்றை எனக்கணிவித்து
நாயோன் என்னைத் தூயோன் ஆக்கி
எனை ஆட் கொள்க! எனை ஆட் கொள்க!
எனை ஆட் கொள்க எம்மான் நீயே!

சிவ கவசம்

ஒவ்வொரு நபரும் சில பிரச்சனைகளை கடந்து, வியாபாரத்தில் தடைகளை எதிர்கொள்கிறார்கள். இந்த சிவ கவசத்தை முழு மனதுடன் வழிபட்டால் அந்த நபரின் அனைத்து வறுமை மற்றும் துன்பம் நீங்கும். சிவ கவசம் துன்பங்கள் மற்றும் பிரச்சனைகளை நீக்க உதவும். சிவ கவசம், எதிர்மறையை குணப்படுத்தும் மற்றும் உடலை தூய்மையாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. சிவ கவசம் அனைத்து வகையான பயங்கள் மற்றும் தீய கிரகங்களின் தாக்கங்கள், பேய்கள் பற்றிய பயம், கொடிய நோய்கள் மற்றும் மனநலப் பிரச்சினைகளைக் குணப்படுத்தும் பாதுகாவலராக செயல்படுகிறது. இது சிவபெருமானின் ஆசீர்வாதத்துடன் மிகவும் பிரபலமான கவசம் ஆகும்.
Thanks To :  https://www.tamilgod.org/shiva-songs/siva-kavasam-shiva-kavacham-tamil-lyrics




 

https://temple.dinamalar.com/Slogandetails.php?id=928

எல்லா நட்சத்திரக்காரர்களுக்கும் நன்மை அளித்திடும் ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்ரமாலா ஸ்தோத்திரம்:

 
சிவ பஞ்சாட்சர நட்சத்ரமாலா ஸ்தோத்திரம்


ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம் இந்த ஸ்லோகத்தை அவரவர் நக்ஷத்திரத்திற்கு கீழே உள்ள ஸ்லோகத்தை தினம் பாராயணம் செய்து வர சகல காரியங்களும் வெற்றி உண்டாகும்.

திருவாதிரை நட்சத்திர திருநாட்கள், மாத சிவராத்திரி தினங்கள், பிரதோஷ காலம், சோமாவாரம் (திங்கட்கிழமை) ஆகிய புண்ணிய தினங்களில், உடல் உள்ள சுத்தியுடன் இந்த ஸ்லோகங்களைப் பாடி, வில்வம் சமர்ப்பித்து சிவபெருமானை வழிபட கஷ்டங்கள் விலகும்; எண்ணியது ஈடேறும்.

ஸகல பாக்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம்

காலடியில் பிறந்து தன் காலடியால் உலகை வலம் வந்து காமகோடி பீடத்தை ஆரம்பித்து வைத்ததோடு ஷண்மதஸ்தாபனத்தையும் வகுத்து அருளிய மகான், ஆதிசங்கரர். சிவனைத் துதித்து ஒவ்வொரு நட்சத்திரக்காரரும் உய்வடைய அவர் அருளியதுதான் சிவபஞ்சாட்சர நட்சத்திர மாலா. அந்த இருபத்தேழு நட்சத்திரங்களுக்குட்பட்டோர் அனைவரும் சிவனைக் குறித்த இந்தத் துதியை ஜபிக்கலாம், மேன்மையடையலாம். குறிப்பாக, திருவாதிரை நட்சத்திர நாள், மாத, வருட சிவராத்திரி தினங்கள், பிரதோஷ காலம், சோமவாரம் (திங்கட் கிழமை) ஆகிய புண்ணிய தினங்களில், உடல் மற்றும் உள்ள சுத்தியுடன் இத்துதியைப் பாடி, வில்வ தளங்களை சமர்ப்பித்து சிவபெருமானை வழிபட, எந்தத் துயரும் அணுகாது ஓடிவிடும். எண்ணிய நற்செயல்கள் எல்லாம் ஈடேறும்.

அஸ்வினி


ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம: சிவாய
தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய
நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய
பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய

பொருள்: ஐஸ்வர்யம் மிகுந்தவரும், குணக்கடலும், தன் ஒளித் திவலைகளால் சூரியனின் ஒளியையும் தோற்கடிப்பவரும், தன்னுடைய திருப்பெயரைச் சொல்பவருக்கு பந்துவாகவும், ஞானிகளுக்கு பிரதான பந்துவாகவும் விளங்கும் சிவபெருமானே நமஸ்காரம்(இது நான்கு முறை சொல்லப்படுகிறது).


பரணி


கால பீதவிப்ரபால பாலதே நம: சிவாய
சூல பின்ன துஷ்ட தக்ஷபாலதே நம: சிவாய
மூல காரணீய கால காலதே நம: சிவாய
பாலயாதுனா தயாலவாலதே நம: சிவாய

பொருள்: யமனுக்குப் பயந்திருந்த குழந்தையான மார்க்கண்டேயனைக் காத்தருளியவரும், வீரபத்திரமூர்த்தியாக அவதரித்து தட்சனைக் கொன்றவரும், அனைத்திற்கும் மூல காரணமானவரும், காலத்துக்கு மேம்பட்டவரும், கருணைக்கு இருப்பிடமானவருமாக விளங்கும் சிவபெருமானே, நமஸ்காரம்.

கிருத்திகை


இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவேநம: சிவாய
துஷ்ட, தைத்யவம்ச, தூமகேதவே நம: சிவாய
ஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்ம ஸேதவே நம: சிவாய
அஷ்ட மூர்த்தயே வ்ருஷேந்ர கேதவே நம: சிவாய

பொருள்: இஷ்டப்பட்ட சிறந்ததான பொருளைக் கொடுப்பதில் கருணையுள்ள வரும், முப்புரத்திலுள்ள அரக்கர் வம்சத்துக்கு தூமகேதுவானவரும், படைக்கும் தொழில் நடப்பதற்கான தர்மத்தைக் காப்பவரும், பூமி, ஆகாயம், நீர், அக்னி, காற்று, சூரியன், சந்திரன், புருஷன் ஆகிய எட்டையும் தன் உருவாய்க் கொண்டவரும், ரிஷபக் கொடியோனும் ஆகிய சிவபெருமானே நமஸ்காரம்.

ரோஹிணி


ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம: சிவாய
பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாய
பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம: சிவாய
சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாய

பொருள்: மலைபோல வரும் ஆபத்துகளைப் போக்கடிக்கும் மழு ஆயுதத்தைக் கையில் தரித்திருப்பவரும், ஜனங்களின் பாவங்களைப் போக்கும் தேவநதியான கங்கையை முடியில் உடையவரும், பாபங்களைப் போக்குபவரும், சாபத்தினால் ஏற்படும் தோஷங்களைக் கண்டிக்கிற சிவபெருமானே நமஸ்காரம்.

மிருகசீர்ஷம்


வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நம: சிவாய
ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நம: சிவாய
நாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நம: சிவாய
காமிநைக தாந ஹ்ருத்துராபதே நம: சிவாய

பொருள்: ஆகாயத்தைக் கூந்தலாக உடையவரும், ஒளிரும் மங்கள உருவத்தை உடையவரும், சிவ எனும் பெயரைச் சொல்வதாலேயே பாபக்கூட்டங்களை எரிப்பவரும், ஆசை நிறைந்த உள்ளம் உடையவரால் அடையமுடியாதவருமாகிய சிவபெருமானே நமஸ்காரம்.

திருவாதிரை


ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம: சிவாய
ஜிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நம: சிவாய
ப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நம: சிவாய
ஜிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நம: சிவாய

பொருள்: ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் ஆகிய ஐந்து முகங்களைக் கொண்டவரும், பெரிய பாம்பினை குண்டலமாக அணிந்தவரும், வேதங்களின் முறையை வகுத்துக் கொடுத்த பிரும்ம உருவமானவரும், யமனுக்கு உயிர் கொடுத்தவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

புனர்பூசம்


காமநாசனாய சுத்த கர்மணே நம: சிவாய
ஸாம கான ஜாயமான சர்மணேநம: சிவாய
ஹேம காந்தி சாக சக்ய வர்மணே நம: சிவாய
ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நம: சிவாய

பொருள்: தன்னலம் கருதாது செய்யப் படும் கர்மாவை ஏற்றுக்கொண்டு, ஆசையைப் போக்கடிப்பவரும், ஸாம வேதத்தைப் பாடுவதால் ஸெளக்கியத்தைக் கொடுப்பவரும், பொன்னிறமான கவசத்தை உடையவரும், பார்வதிதேவியின் ஸம்பந்தத்தினால் ஸெளக்கியமுற்றவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

பூசம்


ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நம: சிவாய
சின்மயை கரூப தேஹ தாரிணே நம: சிவாய
மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நம: சிவாய
மன்மனோகதாய காம வைரிணே நம: சிவாய

பொருள் : பிறப்பு - இறப்பு எனும் மிகக் கடுமையான பிணியைப் போக்கடிப்பவரும், ஞானமனைத்தும் ஒரே உருவமாயுடைய
வரும், மன விருப்பத்தை நிறைவேற்றுகிறவரும், ஸாதுக்களின் மனத்தில் உள்ளவரும், காமனுக்கு சத்ருவுமான சிவபெருமானே நமஸ்காரம்.

ஆயில்யம்


யக்ஷராஜ பந்தவே தயாளவே நம: சிவாய
ரக்ஷ பாணி சோபி காஞ்ச நாளவே நம: சிவாய
பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நம: சிவாய
அக்ஷி பால வேத பூத தாளவே நம: சிவாய

பொருள் : யட்சர்களின் அரசனான குபேரனுக்கு நெருங்கிய தோழரும், தயை மிகுந்தவரும், பொன் மயமான வில்லை வலக்கரத்தில் கொண்டவரும், கருட வாகனம் உள்ள மகாவிஷ்ணுவின் இதய தாபத்தைப் போக்குபவரும், நெற்றிக் கண்ணரும், மறைகளால் போற்றப்பட்ட திருவடிகளை உடையவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

மகம்


தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜ்வத வேதஸே நம: சிவாய
அக்ஷராத்மனே நமத்பி டௌ ஜஸே நம சிவாய
தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நம: சிவாய
உக்ஷராஜ வாஹதே ஸதாம் கதே நம: சிவாய

பொருள்: வலது கையில் அக்னியை வைத்திருப்பவரும், அட்சரம் எனும் பரமாத்மாவைக் குறிக்கும் சொல்லுக்கு உரித்தானவரும், இந்திரனால் வணங்கப்பட்டவரும், சிவ பஞ்சாட்சர தீட்சை பெற்றவர்களுக்கு ஆத்ம ஒளியைக் காட்டுபவரும், தர்ம ரூபமான காளையை வாகனமாக உடையவரும், சாதுக்களுக்கு நல்வழியை அருள்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

பூரம்


ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நம: சிவாய
ராஜமான நித்ய மந்த ஹாஸினே நம: சிவாய
ராஜகோர காவ தம்ஸ பாஸினே நம: சிவாய
ராஜராஜ மித்ரதா ப்ரகாசினே நம: சிவாய

பொருள்: வெள்ளி மலை என்று  பெயர்பெற்ற கயிலையங்கிரியில் வசிப்பவரும், புன்சிரிப்புடன் கூடியவரும், ராஜஹம்ஸம் எனும் பட்சிபோன்று சிறந்து விளங்குபவரும், குபேரனின் தோழனாக விளங்கும் சிவபெருமானே நமஸ்காரம்.

உத்திரம்

தீனமான வாளி காம தேனவே நம: சிவாய
ஸூந பாண தாஹ த்ருக் க்ருசானவே நம: சிவாய
ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நம: சிவாய
தானவாந்தகார சண்ட பானவே நம: சிவாய

பொருள்: ஏழைகளுக்குக் காமதேனு எனும் தேவலோகத்துப் பசுவை போன்றவரும், புஷ்பங்களை அம்பாக உடைய மன்மதனை எரித்த அக்னியானவரும், தன்னுடைய பக்தர்களுக்கு மேருமலை போன்றவரும், அரக்கர் கூட்டமாகிய இருளுக்குப் பிரகாசமான கதிரவன் போன்றவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

ஹஸ்தம்


ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நம: சிவாய
ஸர்வ தேவதா கணாத் சாயினே நம: சிவாய
பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நம: சிவாய
ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நம: சிவாய

பொருள்: ‘ஸர்வமங்களை’ எனப் பெயர் பெற்ற அம்பிகையுடன் இருப்பவரும், எல்லா தேவ கூட்டத்துக்கும் மேற்பட்டவரும், அரக்கர் குலத்தை வேரறுப்பவரும், எல்லோருடைய மனத்திலும் உண்டாகும் ஆசையை அகற்றுபவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

சித்திரை


ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே நம: சிவாய
மாகரந்த ஸாரவர்ஷ பாஸிணே நம: சிவாய
ஏகபில்வ தானதோபி தோஷிணே நம: சிவாய
நைகஜன்ம பாப ஜால சோஷிணே நம: சிவாய

பொருள்: குறைந்த அளவே பக்தி செய்யும் பக்தர்களையும் வளர்ப்பவரும், குயில் மாதிரி பேச்சு உடையவரும், ஒரு வில்வதளத்தை அர்ப்பணித்தாலேயே மகிழ்ச்சி அடைபவரும், பல பிறவிகளில் செய்த பாபங்களை எரிப்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

ஸ்வாதி


ஸர்வ ஜீவரக்ஷணைக சீலினே நம: சிவாய
பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நம: சிவாய
துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நம: சிவாய
சர்வரீச தாரிணே கபாலினே நம: சிவாய

பொருள்: எல்லாப் பிராணிகளையும் காப்பாற்றுவதில் கருத்துள்ளவரும், பார்வதி தேவிக்குப் பிரியமானவரும், பக்தர்களை அரவணைத்துக் காப்பவரும், தவறான செயல்களில் ஈடுபடும் அரக்கர் சைன்யத்தை அழிப்பவரும், சந்திரனை முடியில் உடைய வரும், கபாலத்தைக் கையில் உடையவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

விசாகம்


பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நம: சிவாய
தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நம: சிவாய
மோஹி தர்ஷி காமினீ ஸமுஹதே நம: சிவாய
ஸ்வேஹித ப்ரஸன்ன காம தோஹதே நம: சிவாய

பொருள்: உமாதேவியின் மனத்துக்கு உகந்த சரீரத்தை உடையவரே, என்னைக் காப்பாற்றும். வெள்ளியங்கிரியில் இருப்பரே, ஈசனே, எனக்கு வரம் அருளும். மஹரிஷிகளின் மனைவியரை மோகிக்கச் செய்தவரும், உம்மிடம் வேண்டியதைக் கொடுப்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

அனுஷம்


மங்களப் ரதாயகோ துரங்கதே நம: சிவாய
கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நம: சிவாய
ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே நம: சிவாய
அங்கஜாரயே கரே குரங்கதே நம: சிவாய

பொருள்: மங்களத்தைச் செய்பவரும், ரிஷப வாகனத்தை உடையவரும், அலைமோதும் கங்கையை தலையில் தரித்தவரும், போரில் சத்ருக்களை ஒழிப்பவரும், மன்மதனுக்குப் பகையானவரும், கையில் மானை உடையவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

கேட்டை


ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நம: சிவாய
அக்னி பால ச்வேத உக்ஷ கேதவே நம: சிவாய
தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நம: சிவாய
கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நம: சிவாய

பொருள்: பக்தர்கள் கோருவதைக் கொடுப்பவரும், யாகம் இயற்றுபவர்களைக் காப்பவரும், ரிஷபக் கொடியோனும், வெள்ளியைத் தோற்கடிக்கும் பேரொளி மிக்க உடலை உடையவரும், வீட்டில் உண்டாகும் துயரங்களை எல்லாம் அடியோடு தொலைப்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

மூலம்


திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நம: சிவாய
தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நம: சிவாய
ருக்ஷராஜ பானு பாவகாக்ஷதே நம: சிவாய
ரக்ஷமாம் ப்ரஸன்ன மாத்ர ரக்ஷதே நம: சிவாய

பொருள்: முக்கண்ணரும், எளியவர்களிடத்தில் கருணையுடையவரும், தட்ச ப்ரஜாபதியின் யாகத்தை நாசம் செய்தவரும், சந்திரன், சூரியன், அக்னி மூவரையும் கண்களாய் உடையவரும், வணங்கிய பக்தர்களை தாமதமில்லாமல் காப்பவருமாகிய சிவபெருமானே நமஸ்காரம்.

பூராடம்


அந்ரி பாணயே சிவம் கராயதே நம: சிவாய
ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாய
பங்க பீஷிதா பயங்கராயதே நம: சிவாய
பங்க ஜாஸனாய சங்கராயதே நம: சிவாய

பொருள்: மங்களத்தைச் செய்பவரும், துயரமெனும் சமுத்திரத்தை கடக்கவைப்பதில் மிகச் சிறந்த படைவீரன் போன்றவரும், சம்சாரக் கடலுக்கு பயந்தவர்களின் அச்சத்தைப் போக்கடிப்பவரும், தாமரைக் கண்ணரும், சுகத்தை அருள்பவருமாகிய சிவபெருமானே நமஸ்காரம்.

உத்திராடம்


கர்மபாச நாச நீலகண்டதே நம: சிவாய
சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நம: சிவாய
நிர்ம மர்ஷி ஸேவி தோப கண்டதே நம: சிவாய
குர்மஹே நதீர்ந மத்விகுண்டதே நம: சிவாய

பொருள்: கர்மாவாகிற கயிற்றை அழிக்கிற நீலகண்டரும், சுகத்தைக் கொடுப்பவரும், சிறந்த திருநீற்றை கழுத்தில் தரித்தவரும், தன்னுடையது எனும் எண்ணம் நீங்கப்பெற்ற மகரிஷிகளை அருகில் கொண்டவரும், விஷ்ணுவால் வணங்கப்பட்டவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

திருவோணம்


விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நம: சிவாய சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நம: சிவாய
இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம: சிவாய கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய
பொருள்: சுவர்க்கத்துக்குத் தலைவரும், விஷ்ணுவால் போற்றப்பட்டவரும், ஒழுக்கமுள்ள பக்தர்களின் இதயக்குகையில் சஞ்சரிப்பவரும், தானே பிரம்மம் எனும் அனுபவத்தில் எப்போதும் மகிழ்ச்சி உள்ளவரும், புலன்களை அடக்கியவரும், பக்தர்களது துயரத்தைத் துடைப்பவரும், உலகத்தை ஜெயிப்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

அவிட்டம்


அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நம: சிவாய
ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நம: சிவாய
ஸ்வப்ரகாச நிஸ்துலா நுபாவதே நம: சிவாய
விப்ர டிம்ப தர்சிதார்த்ர பாவதே நம: சிவாய

பொருள்: அளவிடமுடியாத தெய்வீக மகிமை பொருந்தியவரும், தன்னைச் சரணடைந்த பக்தர்களைக் காப்பதில் நாட்டமுற்றவரும், தன்னிடத்திலேயே ஒளிரும் அளவில்லாத ஆத்மானுபவத்தை உடையவரும், மார்க்கண்டேயருக்குத் தன் அன்பைக் காட்டியவருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.

சதயம்


ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நம: சிவாய
பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நம: சிவாய
பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நம: சிவாய
தாவ காங்க்ரி பக்த தத்த மோத தேநம: சிவாய

பொருள்: பரமேஸ்வரா! உம்முடைய வேலைக்காரனான என்னிடம் கருணை காட்டும். இதயத்தில் பாவனை செய்யும் அளவுக்கு அருள்புரிபவரும், நெருப்பைக் கண்ணாக உடையவரும், தேவர்களும் வணங்கித் தொழும் திருவடியை உடையவரும், தன்னுடைய திருவடியைச் சரணடையும் பக்தர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுப்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

பூரட்டாதி


புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம: சிவாய
சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய
பக்த ஸங்கடாபஹர யோகினே நம: சிவாய
யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நம: சிவாய

பொருள்: இன்பம், வீடு, தேவலோகத்து அனுபவம் ஆகியவற்றைக் கொடுப்பவரும், தனக்கு அடக்கமான மாயையினால் தோற்றுவிக்கப்பட்ட உலகத்தில் சம்பந்தமுள்ளவரும், தன் பக்தர்களின் துயரத்தைப் போக்குவதில் ஆழ்ந்த கவனம் உள்ளவரும், ஸாதுக்களின் மனத் தாமரையில் வசிக்கும் யோகியுமான சிவபெருமானே நமஸ்காரம்.

உத்திரட்டாதி


அந்த காந்த காய பாப ஹாரிணே நம: சிவாய
சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம: சிவாய
ஜந்து ஜாத நித்ய ஸௌக்ய காரிணே நம: சிவாய

பொருள் : காலனுக்குக் காலனானவரும், பாபத்தைப் போக்குபவரும், மாயையை அடக்கியவரும், எப்போதும் உள்ள துயரத்தைத் துடைப்பவரும், பிறந்த ஜீவனுக்கு நித்ய ஸெளக்கியம் எனும் பேரின்பத்தை அளிப்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

ரேவதி


சூலினே நமோ நம: கபாலினே நம: சிவாய
பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நம: சிவாய
லீலினே விசேஷ முண்ட மாலிநே நம: சிவாய
சீலினே நம ப்ரபுண்ய சாலினே நம: சிவாய

பொருள்: சூலத்தையும் ஓட்டையும் கையில் வைத்திருப்பவரும், தம்மை வணங்கும் ஜீவர்களைக் காப்பவரும், பிரம்மாவின் கபாலத்தை உடையவரும், ஜனங்களின் நன்மைக்காக பல அவதாரங்களை எடுத்து நன்மை செய்பவரும், நிறைய புண்ணியம் செய்தவர்களாலேயே அடையக்கூடிய வருமான சிவபெருமானே நமஸ்காரம்.





 

ஶ்ரீ ருத்ராஷ்டகம் பாடல் பொருள்:

1. எல்லோருக்கும் தலைவரும், மோக்ஷ ஸ்வரூபரும், மேலானவரும், எங்கும் வியாபித்திருப்பவரும், பிரம்மஸ்வரூபரும், வேதமே உருவானவரும், ஈசானன் என்ற பெயருடைய வருமான சிவபெருமானை நான் நமஸ்காரம் செய்கின்றேன். ஸத்தியதுவம், குணங்களுக்கு அப்பாற்பட்டவரும், வேறுபாடுகள் அற்றவரும். இச்சைகள் அற்றவரும் ஞானகாய வடிவானவரும், ஆகாயத்தை ஆடையாகவுடையவருமான ஈசனை நான் பஜிக்கின்றேன். (பஜித்தல் – ஸேவைசெய்தல், வழிபடுதல்).

2. உருவமற்றவரும், பிரணவம் எனப்படும் ஓங்காரத்திற்கு மூலமானவரும், மும்மூர்த்திகளுக்கும் மேற்பட்ட நான்காவது மூர்த்தியும், வாக்கு – அறிவு – ஐம்புலன்கள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவரும், தலைவரும், கயிலைமலையில் வசிப்பவரும், நீயோர்க்குப் பயங்காரமானவரும், காலனாகிய யமனுக்கும் காலத்தைச்செய்பவரும், தயையுடையவரும், நற்குணங்களுக்கு இருப்பிடமானவரும், தயையுடையவரும், நற்குணங்களுக்கு இருப்பிடமானவரும், பிறப்பிறப்பென்னும் ஸம்ஸாரச்சூழலுக்கு அப்பாற்பட்டவருமான ஶ்ரீ பரமேஸ்வரரை நான் வணங்குகிறேன்.

3. பனிமலையாகிய இமயத்துக்கு ஒப்பான வெண்மை நிறமும் கம்பீரமும் உடையவரும், கோடிக்கணக்கன மன்மதர்களின் ஒளியும் அழகும் அமைந்த திருமேனியை உடையவரும், அலைகளையுடைய அழகிய கங்காநதி தலையினில் விளங்க நெற்றியில் பிறைச்சந்திரனைச்சூடிக் கழுத்தில் பாம்புடன் உள்ளவருமான (ஈசனை வணங்குகின்றேன்).

4. காதுகளில் அசையும் குண்டலங்களும், அழகுபொருந்திய விசாலமான திருவிழிகளுமுடைய மகிழ்ச்சி ததும்பும் திருமுகமுடையவரும் நீலகண்டரும், கருணாமூர்த்தியும், சிம்மத்தின் தோலை ஆடையாகத் தரித்தவரும், கபாலமாலை அணிந்தவரும், அனைத்துயிர்க்கும் பிரியமானவரும், உலகிற்கு நன்மையைச் செய்பவருமான ஸர்வேசுவரனை பஜிக்கின்றேன்.

5. பேராற்றலுடையவரும், பரமேசுவரரும், முழுமையானவரும், பிறப்பற்றவரும், கோடிசூர்யப் பிரகாசம் உடையவரும், (ஆணவம், கன்மம், மாயை) என்ற மூன்று வகையான விலங்குகளை உடைத்தெறியவரும், முத்தலைச் சூலத்தையேந்திய திருக்கரத்தையுடையவரும், மெய்யன்புடைமையால் அடையக்கூடியவரும், பவானீதேவியின் கணவருமான சிவபெருமானைப் போற்றி வணங்குகின்றேன்.

6. கலைகளுக்கு அப்பாற்பட்டவரும், மங்கள வடிவினரும், கல்பங்களுக்கு முடிவை (பிரளயத்தை)ச்செய்பவரும், எப்பொழுதும் ஸாதுகளுக்கு ஆனந்தத்தையளிப்பவரும், முப்புரங்களை அழித்தவரும், சச்சிதானந்தஸ்வரூபரும், அஞ்ஞானத்தை அகற்றுபவரும், மன்மதனை எரித்தவருமான பிரபுவே (எங்களிடம்) மகிழ்ச்சியுடன் அருள்புரிவீராக, மகிச்சியுடன் அருள்புரிவீராக.

7. உமாநாதனே! எதுவரையில் உமது திருவடித்தாமரைகளை மக்கள் தொழவில்லையோ, அதுவரையில் இந்த உலகத்திலோ அல்லது பரலோகத்திலோ அவர்கள் சுகத்தையோ அமைதியையோ அல்லது துக்கநாசத்தையோ அடையமாட்டார்கள். அனைத்து உயிர்களின் ஹ்ருதயங்களில் வாஸம் செய்யும் பிரபுவே! எங்கட்கு அருள் செய்வீராக.

8. நான் யோகம் அறியேன்; ஜபம் பூஜை இவைகளையும் நானறியேன். எப்போழுதும் சம்புவான உம்மையே நமஸ்காரம் செய்கிறேன். பிரபோ, சம்போ, ஈசா, முதுமை – பிறப்பு (இறப்பு) ஆகிய துன்பங்களால் வெந்து தவித்துக் கொண்டிருக்கும் துக்கமடைந்தவனான என்னை (அவைகளினின்றும்) காப்பாற்றியருள்வீராக.

சிவபெருமானின் திருப்திக்காக கூறப்பட்ட இந்த ருத்ராஷ்டகம் என்ற ஸ்தோத்ரத்தை எவர்கள் பக்தியுடன் படிக்கின்றார்களோ அவர்களிடம் சம்புவான பரமேச்வரன் மகிழ்ச்சியடைகின்றார்.

சிவ ருத்ராஷ்டகம் பலன்கள் (Shiv Rudrashtakam Lyrics & Benefits)

சிவன் ருத்ராஷ்டகம் என்பது சிவபெருமானின் மிகவும் சக்தி வாய்ந்த பாடல்களில் ஒன்றாகும். இந்த பாடலை ஸ்ரீ ராம் சரிதமானஸில் காணலாம். தினமும் ஸ்ரீ ருத்ராஷ்டகம் பாராயணம் செய்வதால் சிவபெருமானின் அருளை எளிதில் பெறலாம்.

சிவன் ருத்ராஷ்டகத்தின் பலன்களை இங்கே நாங்கள் பட்டியலிடுகிறோம்:

  • சிவ ருத்ராஷ்டகத்தை தினமும் காலையிலும் மாலையிலும் ஏழு நாட்கள் (தொடர்ந்து) பாராயணம் செய்வது உங்கள் எதிரிகளை வெல்ல உதவும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், ஒருவர் ஸ்ரீ ருத்ராஷ்டகத்தை நம்பிக்கையுடன் ஜபிக்க வேண்டும்.
  • சிவ ருத்ராஷ்டகம் குழப்பமான மனதைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது உங்கள் மனதில் இருந்து அனைத்து குழப்பமான எண்ணங்களையும் விரட்டுகிறது மற்றும் சுய கவனம் செலுத்தி மனதை ஒருமுகப்படுத்த உங்களை அனுமதிக்கிறது. எனவே, சிவ ருத்ராஷ்டகம் உங்கள் மனதை தூய்மைப்படுத்துகிறது.
  • ருத்ராஷ்டகம் உங்கள் வாழ்க்கையில் வெற்றியைக் கொண்டுவர உதவுகிறது.
  • இது எல்லாவிதமான அச்சங்களையும் அழுத்தங்களையும் நீக்குகிறது.
  • ருத்ராஷ்டகம் ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் மேம்படுத்துகிறது.
  • இது உங்கள் உடல், மனம் மற்றும் ஆன்மாவை புத்துணரச் செய்கிறது.
  • ருத்ராஷ்டகம் கிரகங்களின் தீமைகளை நீக்குகிறது.
  • இது உங்கள் வாழ்க்கையில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் தருகிறது.
  • முழு பக்தியுடன் ஜபித்தால், ருத்ராஷ்டகம் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும்.
  • ஸ்ரீ ருத்ராஷ்டகத்தை தொடர்ந்து ஜபித்து வந்தால் உங்கள் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும்.

உண்மையில், சிவ ருத்ராஷ்டகத்தை குறைந்தது 108 நாட்களுக்கு உச்சரிப்பது குறிப்பிடத்தக்க பலன்களைத் தரும். ஸ்ரீ ருத்ராஷ்டகம் பாடுவது "சிவலோகத்திற்கு" (சிவனின் இருப்பிடம்) உங்கள் இடத்தை உறுதிப்படுத்துகிறது என்று நம்பப்படுகிறது. நல்ல செயல்களைச் செய்தால் இது சாத்தியம். சிவ ருத்ராஷ்டகம் பாடி சிவபெருமானின் அருளைப் பெறுங்கள்.

ஈஸ்வர தியானம் மந்திரம்

ஈஸ்வர தியான மந்திரம்

ஈஸ்வரனை, பரமேஸ்வரனை மனத்தில் நிறுத்தி தியானம் செய்வதற்கான‌ தமிழ் மந்திரம்.

நமசிவாய பரமேஸ்வராய சசிசேகராய நம ஓம்

பவாய குண சம்பவாய சிவதாண்டவாய நம ஓம்.

சிவாய நம ஓம் சிவாய நம:
சிவாய நம ஓம் நமசிவாய

சிவாய நம ஓம் சிவாய நம:

சிவாய நம ஓம் நமசிவாய
சிவ சிவ சிவ சிவ சிவாய நம ஓம்
ஹர ஹர ஹர ஹர நமசிவாய - சிவாய நம
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய நமசிவாய - சிவாய நம
ஓம் சிவாய சங்கரா

ஓம் சிவாய நமசிவாய ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
சுந்தரக் கலாதரனே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா

கங்கையைத் தரித்தவரே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
காசிநாதா விசுவநாதா ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா

பார்வதி மணாளனே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
ஆடும்பாம்பை அணிந்தவனே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா

ஆனைமுகம் தந்தையாரே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
ஆறுமுகம் தந்தையாரே ஓம் சிவாய சங்கரா

சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா
ஐயப்பன் ஐயனாரே ஓம் சிவாய சங்கரா
சசிதரனே சுந்தரேசா ஓம் சிவாய சங்கரா


மஹா மிருத்யுஞ்சய மந்திரம் | Maha Mrityunjaya Mantra in Tamil

மஹா மிருத்யுஞ்சய மந்திரம்

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் |
உர்வாருகமிவ பந்தனான்-ம்ருத்யோர்முக்ஷீய மாம்ரிதாத் ||

மிருத்யுஞ்ஜய மந்திரத்தின் பொருள் (Maha Mrityunjaya Mantra Meaning in Tamil)

மிருத்யுஞ்ஜய மந்திர பொருள்

நறுமணம் கமழும் மேனியனே, மூன்று கண்களை உடையவனே, (அனைவரையும்) பேணி வளர்ப்பவனே, உனை நாங்கள் வணங்குகிறோம்.

பழம் கனிந்து கிளையின் பிணைப்பிலிருந்து விடுதலையாகி உதிர்வதைப் போல மரணத்திலிருந்தும், நிலையற்ற தன்மையிலிருந்தும் எங்களுக்கு விடுதலை தருவாயாக.

மிருத்யுஞ்ஜய மந்திர சிறப்பு

மிருத்யுஞ்ஜய மந்திரத்தின் பலன்சிறப்பு | Significance of Mrityunjaya Mantra

சக்திவாய்ந்த மஹா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை (Mrityunjaya Mantra in Tamil). இந்த மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் (Maha Mrityunjaya Mantra) பிரம்மிருஷி வஷிஷ்ட மைத்ரவரூணி வழங்கிய ரிக் வேதத்தின் 7 வது மண்டலத்திலிருந்து வந்தது… நோய் தாக்கியவர்கள் மற்றும் உடல் நலன் குறைபாடுகளில் உள்ளவர்கள் இந்த மந்திரத்தை தொடர்ந்து தினமும் சொல்லி வந்தால் விரைவில் நோய் குணமாகும் என்பது நம்பிக்கை. ரிக் வேதத்திலும், யஜூர் வேதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இந்த மகா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் மூலம் மரண பயம் நீங்கும், ஆயுள் அதிகரிக்கும், இறை வழிபாட்டில் நாட்டம் ஏற்படும், தீராத நோய் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது

புராணங்களில் மிருத்யுஞ்ஜய மந்திரம்

பண்டைய சமஸ்கிருதத்தில் உள்ள இந்த மந்திரம், அறிவொளிக்கான அழைப்பு மற்றும் ஆன்மாவின் கர்மாவை மிகவும் ஆழமான மட்டத்தில் சுத்தி செய்ய‌ வழி வகுக்கிறது. உணர்ச்சி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. "ருத்ர மந்திரம்" என்றும் அழைக்கப்படும் மிருத்யுஞ்சய மந்திரம் "ரிக் வேதம் VII.59.12", "யஜுர் வேதம் III.60", அதர்வ வேதம் XIV.1.17", "சிவ புராணம்" ஆகியவற்றில் காணப்படுகிறது. புராணத்தின் படி சுக்ராச்சாரியார் முனிவருக்கு சிவபெருமான் மூலம் இந்த‌ மந்திரம் வழங்கப்பட்டது.

த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி-வர்தனம் ǀ
உர்வாருகம்-இவ பந்தநாத்மருத்யோர்முக்ஷியா மாம்ருதாத்
==பூர்புவஸ்ஸுவரோம் ஜூம் சஹா ஹௌம் ஓம் ǁitiǁ==

மஹாமிருத்யுஞ்சய மந்திர வகைகள்

மிருத்யுஞ்சய் மந்திரம், ஏகாக்ஷர் மிருத்யுஞ்சய மந்திரம், த்ரயக்ஷர் மிருத்யுஞ்சய மந்திரம், சதுராக்ஷர் மிருத்யுஞ்சய மந்திரம், நவக்ஷர் மிருத்யுஞ்சய மந்திரம்.

மதுரை மீனாட்சி அம்மன் ஸ்துதி

அம்மா மதுரை மீனாக்ஷி
அருள்வாய் காஞ்சி காமாட்சி
அன்பாய் எனையே ஆதரித்து
அல்லல் களைந்தே காப்பாற்று
அன்னை தேவி பராசக்தி
என்னை படைத்தது உன்சக்தி
வாழ்வைத் தந்து வளம் தந்து
வாழ்க்கைக் கடலின் கரையேற்று
தில்லை சிதம்பரம் பத்தினியே
நெல்லையில் வாழும் பத்தினியே
திருவடி மலரினைத் தொழுதிடுவேன்
திருவருள் புரிந்தெனைக் காப்பாற்று
ஓங்காரப் பொருள் நீதானே
உலகம் என்பதும் நீதானே
காணும் இயற்கைக் காட்சிகளும்
காற்றும் மழையும் நீதானே
அம்மா தாயே உனைவேண்டி
அழுதிடும் என்னைத் தாலாட்டி
அன்புடன் ஞானப் பாலூட்டி
அகத்தின் இருளைப் போக்கிடுவாய்
உள்ளக் கோயில் உன்கோயில்
உயிரும் மூச்சும் உன் வடிவம்
பேச்சும் செயலும் உன்செயலே
பெருகட்டும் உன் பேரருளே

மீனாட்சி பஞ்சரத்னம்

Meenakshi Pancharatnam Lyrics in Tamil | ஸ்ரீ மீனாக்ஷீ பஞ்சரத்னம் ஸ்லோக‌ வரிகள்


மீனாட்சி பஞ்சரத்னம் பொருள்

Meenakshi Pancharatnam Meaning in Tamil | ஸ்ரீ மீனாக்ஷீ பஞ்சரத்னம் ஸ்லோக‌ பொருள் மற்றும் வரிகள்

  

மீனாட்சி பஞ்சரத்தினம் (மீனாட்சியின் ஐந்து நகைகள்) என்பது மீனாட்சி தேவியின் மீது கார்ய‌ஸித்தி மந்திரமாக ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரால் இயற்றப்பட்ட ஒரு பிரபலமான ஸ்தோத்திரமாகும். இந்த ஸ்தோத்திரம் சுந்தரேஸ்வரரின் (சிவன்) மனைவி மீனாட்சி தேவியின் தெய்வீக குணங்கள், தோற்றம் மற்றும் மகத்துவத்தை விளக்குகிறது.


உத்யத்பானு சஹஸ்ரகோடி ஸத்ருசாம் கேயூர ஹாரோஜ்ஜவலாம்
பிம்போஷ்டீம் ஸ்மிததங்க்த பங்க்தி ருசிராம் பீதாம்பராலங்க்ருதாம்
விஷ்ணு ப்ரஹ்ம சுரேந்த்ர ஸேவித பதாம் தத்வ ஸ்வரூபாம் சிவாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்.

ஆயிரம் கோடி உதயசூரியனின் ஒளிக்கு ஈடான ஒளியை உடையவளும்; வளையல்கள், மாலைகள் போன்ற அணிகளால் ஒளிவீசுபவளும்; கோவைப்பழங்கள் போன்ற இதழ்களை உடையவளும் புன்னகை புரியும் பல்வரிசைகள் உடையவளும்; பொன் பட்டாடைகளால் அழகு பெற்றவளும் திருமால், பிரமன், தேவர் தலைவன் போன்றவர்களால் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவளும் உண்மைப் பொருளானவளும் மங்கள வடிவானவளும் கருணைக்கடல் ஆனவளும் பெரும் செல்வம் ஆனவளும் ஆன மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.

முக்தாஹார லஸத் கிரீடருசிராம் பூர்ணேந்து வக்த்ர ப்ரபாம்
சிஞ்சந் நூபுர கிண்கிணீ மணிதராம் பத்மப்ரபா பாஸுராம்
ஸர்வாபீஷ்ட பலப்ரதாம் கிரிஸுதாம் வாணீ ரமா ஸேவிதாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்

முத்துமாலைகளால் சூழப்பட்ட ஒளிவீசும் மௌலியை (மகுடத்தை) உடையவளும், ஒளி வீசும் முழுமதியைப் போன்ற திருமுகத்தை உடையவளும், கிண் கிண் என்று ஒலி செய்யும் மாணிக்க சிலம்புகளை அணிந்தவளும், தாமரை போல் அழகு பொருந்தியவளும், அடியவர்களின் ஆசைகள் அனைத்தையும் அருளுபவளும், மலைமகளும், கலைமகளாலும் அலைமகளாலும் வணங்கப்பட்டவளும்;கருணைக்கடல் ஆனவளும், பெரும் செல்வம் ஆனவளும் ஆன மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.

ஸ்ரீவித்யாம் சிவவாமபாகநிலயாம் ஹ்ரீம்கார மந்த்ரோஜ்வலாம்
ஸ்ரீசக்ராங்கித பிந்து மத்ய வஸதீம் ஸ்ரீமத் சபாநாயகீம்
ஸ்ரீமத் ஷண்முக விக்னராஜ ஜனனீம் ஸ்ரீமத் ஜகன்மோஹினீம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்

மறைகல்வி வடிவானவளும், சிவபெருமானின் இடப்பாகத்தில் வசிப்பவளும், ஹ்ரீம் என்ற வித்தெழுத்து மந்திரத்தில் (பீஜாக்ஷர மந்திரம்) ஒளி வீசி இருப்பவளும், ஸ்ரீசக்ரத்தின் நடுவட்டத்தில் வசிப்பவளும், சுந்தரேசுவரனின் சபைக்குத் தலைவியும், ஆறுமுகனான முருகனையும் தடைகளை நீக்கும் விநாயகனையும் பெற்றவளும்; உலகங்களை மயக்குபவளும், கருணைக்கடல் ஆனவளும், பெரும் செல்வம் ஆனவளும் ஆன மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.

ஸ்ரீமத் சுந்தரநாயிகாம் பயஹராம் ஞானப்ரதாம் நிர்மலாம்
ச்யாமாபாம் கமலாசனார்ச்சிதபதாம் நாராயணஸ்யானுஜாம்
வீணா வேணு ம்ருதங்க வாத்ய ரசிகாம் நானாவிதாமம்பிகாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்.

சுந்தரேசருடைய நாயகியும், அடியவர்களுடைய பயத்தை நீக்குபவளும், அடியவர்களுக்கு பேரறிவை (ஞானத்தை) நல்குபவளும், குறையொன்றும் இல்லாதவளும், கருநீல நிறம் கொண்டவளும், தாமரையில் அமர்ந்திருக்கும் பிரம்மனால் அருச்சிக்கப்பட்ட திருவடிகளை உடையவளும், நாராயணனுடைய தங்கையும், யாழ், குழல், மிருதங்கம் முதலியவற்றின் இசையை இரசிப்பவளும், பல்விதமான உயிர்களுக்கு அன்னையும, கருணைக்கடல் ஆனவளும, பெரும் செல்வம் ஆனவளும் ஆன மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.

நானா யோகி முனீந்த்ர ஹ்ருந் நிவஸதீம் நானார்த்த சித்திப்ரதாம்
நானா புஷ்ப விராஜிதாங்க்ரியுகளாம் நாராயணேநார்ச்சிதாம்
நாதப்ரஹ்மமயீம் பராத்பரதராம் நானார்த்த தத்வாத்மிகாம்
மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்

சிறந்த யோகிகள், முனிவர்கள் போன்றவர்களின் இதயத்தில் என்றும் வசிப்பவளும், வேண்டும் அனைத்துப் பொருட்களையும் தருபவளும், எல்லாவிதமான பூக்களாலும் அழகு பெற்ற திருவடிகளை உடையவளும், நாராயணனாலும் அருச்சிக்கப்பட்டவளும், நாதபிரம்ம உருவானவளும், உயர்ந்ததிலும் உயர்வானவளும், அனைத்துப் பொருட்களிலும் உள்நின்று இயக்குபவளும், கருணைக்கடல் ஆனவளும், பெரும் செல்வம் ஆனவளும் ஆன மீனாட்சியை அடியேன் எப்பொழுதும் வணங்குகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *