எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்
நடக்கும் மேன்மை நமக்கு அருள் செய்திடத்
தடக்கை ஐந்துடைத் தாழ் செவி நீள் முடிக்
கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்!.
அவன் ஒருவனே அனைத்துமாகவும் , அனைத்திலும் அவன் ஒருவனாகவும் இரண்டறக்கலந்து கலந்து இருப்பவனை ,பஞ்ச பூதங்கள் ஆனவனை , யாண்டும் இளமையோடு கூடிய அழகனை , தேவர்களுக்கும் எட்டாத அதீதத்தில் இருக்கும் சித் ஆகாசனை , அடியவர்களுக்கு எளி வந்த பிரானை,பற்றிப் பிடித்து வளர்வதற்குக் கொம்பு ஒன்றும் இல்லாத கொடி சுழல்வது போன்று மனம் தடுமாறுகிற ,தவிக்கின்ற நம்மைக் காத்து அருள்வானை ,தேவர்களுக்கு மகாதேவராகவும் அனைத்துயிர்களுக்கும் அம்மையப்பராகவும் உள்ள நம் ஈசன் சிவபெருமான் அவன் வாக்கின் கண் எழுந்த "மேலான வழிபாடாவது போற்றியுரைக்கும் புகழுரைகளே யாகும்" என்பதனால் தானே தனது உயிராம் மெய்யடியார்கள் மூலம் உலகம் உய்ய, உயிர்கள் தனதியல்பாம் சிவத்தினுள் நிலை பெற்று சிவானந்தத்தில் என்றென்றும் திளைத்திருக்க அருளிய தேன்மதுரத் தேவாரத் திருமுறைப் பதிகங்களை , பொருளுணர்ந்து , நாவார, நெஞ்சுர மகிழ்ந்து பாடி ஈசன் திருவடியில் என்றென்றும் மாறா அன்பினோடு மனம், மெய் ,மொழியினால் ஒன்றாகி இரண்டறக்கலந்து அவனருளால் நிலைத்து இருப்போமாக!
இவ்விணையத்தை பயன்படுத்தும் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் சிவபெருமான் தான் எழுந்தருளியுள்ள தன்மையினை உணர்த்தவும், யாவற்றிலும் தன்னையே காணும்; பேதமற்ற பரிபக்குவ நிலையை அளித்தருளவும் முக்கண் முதல்வர் திருவுள்ளம் கொள்வோனாக!
சிவபெருமான் தேவார சிவத் திருத்தொண்டரடியவர்கள் திருக்குழு
https://tevaaram.blogspot.com
(No AdSense /Advertisement ) வில் இணைந்து இணையவழி பங்களிப்பை அளித்து சிவத் தொண்டு புரிய விருப்பமுள்ளவர்கள்
தங்கள் மின்னஞ்சல் முகவரியையும் , whatsup தொலைபேசி எண்ணையும் கீழே உள்ள
தொடர்பு படிவம்
முலம் பகிரவும்...
(அத்தகவல் இந்த மின்னஞ்சளுக்கு
thevaarams@gmail.com வந்தடையும். ).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக